அறிவு பெறாதவர்கள் மனிதர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.
ஏனெனில், கால்நடைகளை விட்டும் மனிதனை பிரித்துக் காட்டுவது அறிவு எனும் சிறந்த பண்பே. அறிவின் காரணமாகவே மனிதன் "மனிதன்" எனும் கண்ணியத்தைப் பெறுகிறான்.
உடல் பலத்தால் அது கிடைப்பதில்லை.
அவ்வாறாயின் ஒட்டகம் அவனைவிட பலமடங்கு பலம் பெற்றது.
உடல் பருமனாலும் அது கிடைப்பதில்லை.
ஏனெனில் யானை அவனைவிட பருமன் மிக்கது.
வீரத்தாலுமல்ல.ஏனெனில் காட்டு விலங்குகள் அவனைவிட வீரியம் பொருந்தியவை.
அதிகம் உண்பதாலுமல்ல.எருமை அவனைவிட அதிகம் சாப்பிடுகின்றது.
சந்ததி பெற்றுக் கொள்வதாலுமில்லை.
சின்னஞ்சிறு குருவிகள் ஒரே தடவையில் பல குஞ்சுகளை ஈன்று விடுகின்றன.
எனவே அறிவுக்காகவேயன்றி மனிதன் படைக்கப்படவில்லை.
- இமாம் கஸ்ஸாலி -
( நன்றி சமரசம்)