Thursday, February 20, 2014

சூரியனுக்கு உரிமை கொண்டாட முடியுமா?

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்..?!

தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் நீங்கள் இன்று சுகதேகியாக வாழ்வதற்கு முக்கிய காரணிகளுள் ஒருவராக இவர் இருக்கின்றார்.

இவர்தான். Dr.Jonas Salk  'போலியோ'வுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்!

சரி,எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும் போது இவருக்கு மட்டும் ஏன்
இவ்வளவு சிறப்பு??
 
இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு Patent Right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம்). 

இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். ஆனால், அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய்ப்பட்டு இறந்திருப்பார்கள்!
 
பேட்டி ஒன்றில், "ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை?" எனக்கேட்டதற்கு, "சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா?" என்று கேட்டார், இந்த மாமனிதர்! (When he was asked in a televised interview who owned the patent to the vaccine, Salk replied: "There is no patent. Could you patent the sun?" - Wikipedia)

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை..!