பின்பற்றப்பட்டோர் வேதனையைக் காணும்போது (தம்மைப்) பின்பற்றியோரிடமிருந்து விலகிக் கொள்வர். அவர்களிடையே (இருந்த) உறவு முறிந்து விடும். உலகுக்கு திரும்பிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருக்குமானால் அவர்கள் எங்களிடமிருந்து விலகிக் கொண்டதைப் போல் அவர்களிடமிருந்து நாங்களும் விலகிக் கொள்வோம் என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இப்படித்தான் அல்லாஹ் அவர்களது செயல்களை அவர்களுக்கே கவலையளிப்பதற்காகக் காட்டுகிறான். அவர்கள் நரகிலிருந்து வெளியேறுவோர் அல்லர் (2:166,167)
• இமாம் ஷாபி (ரஹ்) அவர்களின் கூற்று
أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ حَرْمَلَةَ بْنَ يَحْيَى، يَقُولُ: قَالَ الشَّافِعِيُّ: كُلُّ مَا قُلْتُ، وَكَانَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِلافُ قَوْلِي، مِمَّا يَصِحُّ، فَحَدِيثُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْلَى، وَلا تُقَلِّدُونِي (آداب الشافعي ومناقبه)
நான் ஒன்றைக் கூறியிருக்க, அதற்கு மாற்றமாக ஆதாரபூர்வமான நபிவழி இருந்தால் (பின்பற்றப்படுவதற்கு) தகுதியானது நபிவழியே ஆகும். என்னை நீங்கள் பின்பற்ற வேண்டாம்! என இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹர்மலா நூல்: ஆதாபுஷ் ஷாபியீ:1:69)
• இமாம் ஷாபியின் மாணவர் தரும் வாக்கு மூலம்
ஹிஜ்ரி 264ல் மரணித்த, ஷாபி இமாமின் நெருங்கிய நண்பரும், பிரபல மாணவருமான அல்முஸனீ என்பவர் கூறுகிறார்: இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் தன்னையோ அல்லது பிறரையோ பின்பற்றுவதை தடை செய்துள்ளார்கள். இதை அவர்கள் பகிரங்கமாக (மக்களுக்கு) அறிவித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ இப்றாஹீம் அல்முஸனீ நூல்: (முஹ்தஸருல் முஸனீ 8:93)
• மற்றுமொரு மாணவரின் சாட்சியம்
ஷாபி இமாமின் பிரபல மாணவர் ரபீஃ என்பவர் கூறுகிறார்.
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، وَأَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرٍو قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ قَالَ: سَمِعْتُ الرَّبِيعَ بْنَ سُلَيْمَانَ، يَقُولُ: سَمِعْتُ الشَّافِعِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: إِذَا وَجَدْتُمْ فِي كِتَابِي خِلَافَ سَنَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُولُوا بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَعُوا مَا قُلْتُ (المدخل إلى السنن الكبرى:1:205)
எனது நூலில் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கு எதிரான(கருத்)தைக் கண்டால் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலையே கூறுங்கள்! நான் கூறியதை விட்டு விடுங்கள்! என ஷாபி இமாம் கூறியதை நான் செவியுற்றேன். அறிவிப்பவர்: ரபீஊ பின் ஸுலைமான் நூல்: அல்மத்ஹல்: 1:205)